ஐந்து வகையான ரசம்
இந்தியாவில் பொதுவாக ரசம் இல்லாமல் மதிய உணவே இருக்காது அந்த அளவிற்கு ரசம் உணவில் முக்கிய அங்கம் பெறுகிறது, ரசம் உணவு செரிமான பிரச்சினைக்கு மிகவும் உதவுகிறது, சளி இருமல் போன்ற நோய்களில் இருந்து குணம் அடையச் செய்கிறது மேலும் குழந்தைகளுக்கு விரைவில் ஜீரணம் ஆக ரசம் சாதம் உணவாக அளிக்கப்படுகிறது.உணவின் இறுதியில் ரசம் கொஞ்சம் சேர்த்துக் கொள்வதால் சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணம் அடைகிறது
ரசம் பல வகைகள் உள்ளன. சைவம் அசைவம் இரண்டிலும் உள்ளது இப்போது சைவத்தில் 5 வகைகளை நாம் பார்க்கலாம்.
- தக்காளி ரசம்
- பருப்பு ரசம்
- புளி ரசம்
- மிளகு ரசம்
- எலுமிச்சை ரசம்
Rasam |
தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல் ( தோல் உரிக்காமல்)
காய்ந்த மிளகாய் - 4
மல்லி - 2 டீஸ்பூன்
தாளிக்க எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காய தூள் - 2 பின்ச்
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- வாணலில் மிளகு சீரகம் பூண்டு காய்ந்த மிளகாய்-2 மல்லி கருவேப்பிலை இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து புளிக்கரைசலை தக்காளி சாறுடன் கலந்து வைத்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் - 2 மற்றும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி லேசாக வதக்கவும்
- பிறகு கரைசலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- சுவையான தக்காளி ரசம் ரெடி
பருப்பு ரசம்
துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் (வேக வைத்த பருப்பு)
தக்காளி - 3
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல் ( தோல் உரிக்காமல்)
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காய தூள் - 2 பின்ச்
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை
- மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய்- 1 இவை அனைத்தையும் ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்(வருகாமல்)
- ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து அதனுடன் தக்காளியை பிசைந்து கலந்து வைத்துக் கொள்ளவும்,பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் - 2 மற்றும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி லேசாக வதக்கவும்
- பிறகு கரைசலை ஊற்றி அதனுடன் வேகவைத்த பருப்பு கலந்து நுரை வரும் வரை கொதிக்கவிடவும்.( அதிக நேரம் கொதிக்க வைத்தால் சுவை மாறிவிடும்)
- கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- சுவையான பருப்பு ரசம் ரெடி.
புளி ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல் ( தோல் உரிக்காமல்)
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காய தூள் - 2 பின்ச்
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை:
- மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து அதனுடன் தக்காளியை பிசைந்து மஞ்சள் தூள்,பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி லேசாக வதக்கவும்
- பிறகு கரைசலை ஊற்றி நுரை வரும் வரை கொதிக்கவிடவும்.( அதிக நேரம் கொதிக்க வைத்தால் சுவை மாறிவிடும்)
- சுவையான புளி ரசம் ரெடி.
மிளகு ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
மிளகு - 4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல் ( தோல் உரிக்காமல்)
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காய தூள் - 2 பின்ச்
புளி - நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
செய்முறை:
- மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து அதனுடன் தக்காளியை பிசைந்து மஞ்சள் தூள்,பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு,அரைத்த விழுது சேர்த்துக் கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்
- பிறகு கரைசலை ஊற்றி நுரை வரும் வரை கொதிக்கவிடவும்.( அதிக நேரம் கொதிக்க வைத்தால் சுவை மாறிவிடும்)
- சுவையான மிளகு ரசம் ரெடி.
எலுமிச்சை ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
மிளகு - 4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல் ( தோல் உரிக்காமல்)
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க எண்ணை - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 5
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காய தூள் - 2 பின்ச்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - இஞ்சி - சிறிய துண்டு( சிறிதாக நறுக்கியது)
எலுமிச்சை பழம் - 2 ( ஜூஸ்)துவரம் பருப்பு- 3 டேபிள் ஸ்பூன்( வேக வைத்தது)
செய்முறை
- மிளகு, சீரகம், பூண்டு, இவை அனைத்தையும் ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் உளுந்து கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி லேசாக வதக்கவும்
- பச்சை மிளகாய் இஞ்சி மஞ்சள் தூள் தக்காளி வேகவைத்த பருப்பு 3 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு இவையனைத்தையும் தண்ணீர் கலந்து பத்து நிமிடம் வேக வைக்கவும்,பிறகு வதக்கிய கலவையை இதில் கொட்டி கலக்கவும், பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை இதனுடன் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- சுவையான எலுமிச்சை ரசம் ரெடி
Post a Comment
Post a Comment